தமிழ் பரிமாற்றம் யின் அர்த்தம்

பரிமாற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தன்னிடம் உள்ளவற்றை அல்லது தன் கருத்து, உணர்வு முதலியவற்றை மற்றவர்களுக்குக் கிடைக்கச் செய்து அதேபோல் அவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் முறை; இருவரோ பலரோ தங்களிடையே கொடுத்துப் பெறும் முறை.

    ‘இரு நாடுகளும் போர்க் கைதிகளைப் பரிமாற்றம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டன’
    ‘இந்தியாவும் பாகிஸ்தானும் தீவிரவாதிகள் குறித்துத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளத் திட்டம் வகுக்க வேண்டும்’
    ‘கருத்துப் பரிமாற்றம்’