தமிழ் பரிமாறு யின் அர்த்தம்

பரிமாறு

வினைச்சொல்பரிமாற, பரிமாறி

 • 1

  (உணவு சாப்பிடும்போது ஒருவர் மற்றவருக்கு இலையில், தட்டில்) உணவையும் தொடுகறிகளையும் உரிய முறையில் வைத்தல்.

  ‘அவள் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் பரிமாறிவிட்டுத் தானும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்’
  ‘பெண் வீட்டுக்காரர்கள் பம்பரம்போல் சுழன்று பந்தியில் எல்லோருக்கும் பரிமாறிக்கொண்டிருந்தார்கள்’

 • 2

  கொடுத்துப் பெறுதல்; பரிமாற்றம் செய்துகொள்ளுதல்.

  ‘ஆசியான் நாட்டுத் தலைவர்கள் முக்கியமான பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்’