தமிழ் பரிவர்த்தனை யின் அர்த்தம்

பரிவர்த்தனை

பெயர்ச்சொல்

 • 1

  பரிமாற்றம்.

  ‘நவீன மின்னணுச் சாதனங்களால் தகவல் பரிவர்த்தனை துரிதமடைந்திருக்கிறது’
  ‘இருவருக்குள்ளும் வெகு நாட்களாகக் கடிதப் பரிவர்த்தனை கிடையாது’
  ‘கலாச்சாரப் பரிவர்த்தனை’

 • 2

  (வ. வ.) நிலம், வீடு போன்ற ஒரு சொத்தினைக் கொடுத்து அதன் பெறுமானத்திற்கு வாங்குபவரிடமிருந்து ஒரு சொத்தினைப் பெற்றுக்கொள்ளும் முறை.