தமிழ் பரிவு யின் அர்த்தம்

பரிவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அக்கறை, அனுதாபம், கனிவு ஆகியவை கலந்த உணர்வு.

    ‘மனநோயாளியான மனைவியிடம் அவன் காட்டிய பரிவு வீண்போகவில்லை’
    ‘நான் சொன்ன புகார்களை அதிகாரி பரிவுடன் கேட்டுக்கொண்டார்’
    ‘‘பரீட்சை எப்படி எழுதினாய்?’ என்று பரிவாகக் கேட்டார்’