பரு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரு1பரு2

பரு1

வினைச்சொல்பருக்க, பருத்து

 • 1

  (உடல் உறுப்புகளில்) சதைப்பற்று மிகுதல்; பெருத்தல்.

  ‘முன்பு பார்த்ததைவிட இப்போது பருத்திருந்தார்’
  ‘‘இப்படிப் பருத்துவிட்டாயே’ என்று அவர் ஆச்சரியப்பட்டார்’

 • 2

  (உடம்பிலுள்ள கட்டி, பரு) பெரியதாக ஆதல்.

  ‘கட்டி பருத்து உடையப்போகிறது’

 • 3

  (தடி முதலியவை) சுற்றளவில் பெரிதாக இருத்தல்.

  ‘கைத்தடி மேல்பகுதி பருத்தும் கீழ்ப்பகுதி சிறுத்தும் இருந்தது’

பரு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரு1பரு2

பரு2

பெயர்ச்சொல்

 • 1

  பெரும்பாலும் முகத்தில் எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபடுவதால் ஏற்படும் சிறு கட்டி.

  ‘பருவைக் கிள்ளாதே!’