தமிழ் பருப்பு யின் அர்த்தம்

பருப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (உடைத்துக் காயவைத்து) சமையலுக்குப் பயன்படுத்தும் துவரை, உளுந்து போன்றவற்றின் விதை.

  ‘அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் ஏறிவிட்டது’

 • 2

  வேக வைக்கப்பட்ட துவரம் பருப்பு.

  ‘தட்டில் சோறு வைத்துப் பருப்புப் போட்டு நெய் ஊற்றினாள்’
  ‘பருப்பு சாதம்’

 • 3

  சில வகைத் தாவரங்களில் ஓட்டுக்குள் இருக்கும் அல்லது தோல் மூடி வெளியில் தெரியும்படியாக இருக்கும், உண்ணக்கூடிய விதை.

  ‘வேர்க் கடலைப் பருப்பு’
  ‘முந்திரிப் பருப்பு’

 • 4

  தேங்காயின் வெண்ணிறச் சதைப் பகுதி.