தமிழ் பற்றவை யின் அர்த்தம்

பற்றவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  ஒன்றில் நெருப்புப் பற்றும்படியாகச் செய்தல்.

  ‘அடுப்பைப் பற்றவை’
  ‘பீடி பற்றவைத்தான்’

 • 2

  உலோகங்களின் முனையையோ விளிம்பையோ குறிப்பிட்ட முறையில் அதிக வெப்பத்திற்கு உள்ளாக்கி இளகச் செய்து சூட்டுக்கோலைக் கொண்டு ஒன்றோடு ஒன்று இணைத்தல்.

 • 3

  பேச்சு வழக்கு (இருவருக்கு இடையில் மன வேறுபாடு உண்டாகும்படியாக) கோள்மூட்டுதல்; வத்திவைத்தல்.

  ‘என்னைப் பற்றி மேலதிகாரியிடம் யாரோ பற்றவைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’