தமிழ் பற்றி யின் அர்த்தம்

பற்றி

இடைச்சொல்

  • 1

    ‘(குறிப்பிடப்படும் ஒருவரின் அல்லது ஒன்றின்) தொடர்பாக’ என்ற பொருளில் ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘சம்பந்தமாக’; ‘குறித்து’.

    ‘மொழிப் பிரச்சினைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’
    ‘சுற்றுப்புறச் சூழல் தூய்மைக்கேடுபற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்’
    ‘எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றே புரியவில்லை’