பறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பறி1பறி2பறி3

பறி1

வினைச்சொல்பறிக்க, பறித்து

 • 1

  (பூ, காய் போன்றவற்றைச் செடி, கொடி போன்றவற்றிலிருந்து) தனியாகப் பிரித்து எடுத்தல்.

  ‘பூப் பறிப்பதற்காகத் தோட்டத்துக்குப் போனாள்’
  ‘இரண்டு தேங்காய் பறித்துப் போடு!’
  ‘திருட்டுத்தனமாக மாங்காய் பறித்துத் தின்றார்கள்’

 • 2

  (ஒருவரிடம் இருப்பதை) வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளுதல்; பிடுங்குதல்.

  ‘கத்தியைக் காட்டி நகைகளையெல்லாம் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான்’
  ‘வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணம் பறிக்கும் கும்பல் பிடிபட்டது’
  உரு வழக்கு ‘குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் கொடிய நோய்’

 • 3

  அதிகாரத்தைப் பயன்படுத்திப் பதவி, உரிமை போன்றவற்றை ஒருவரிடமிருந்து எடுத்துக்கொள்ளுதல்.

  ‘மூத்த அமைச்சரிடமிருந்து ஒரு இலாகா பறிக்கப்பட்டது’
  ‘‘இந்தச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கக்கூடியது’ என்று அவர் குற்றம்சாட்டினார்’

 • 4

  பேச்சு வழக்கு தோண்டுதல்.

  ‘இந்த இடத்தில் ஒரு குழி பறிக்கலாம்’

பறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பறி1பறி2பறி3

பறி2

வினைச்சொல்பறிக்க, பறித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (வாகனத்திலிருந்து பொருள்களை ) இறக்குதல்.

  ‘வண்டிக்காரன் விறகை வீதியில் பறித்துவிட்டுப் போய்விட்டான்’

பறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பறி1பறி2பறி3

பறி3

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு மேலிருந்து விழும் நீரோட்டத்தில் வரும் மீன்கள் விழுந்து வெளியேற முடியாதபடி செய்யும், மூங்கில் சிம்புகளால் கூடை போன்று பின்னப்பட்ட, மீன் பிடிக்கும் சாதனம்.

  ‘மீன் பிடிக்கச் சென்றவன் பறி நிறைய மீனுடன் வீட்டுக்கு வந்தான்’