தமிழ் பறிகொடு யின் அர்த்தம்

பறிகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

 • 1

  (இரங்கத் தகுந்த விதத்தில் ஒன்றை அல்லது ஒருவரை) இழத்தல்; தொலைத்தல்.

  ‘கூட்டத்தில் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு அலறினான்’
  ‘இளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவள்’
  ‘எதையோ பறிகொடுத்தவன்போலச் சோகமாக உட்கார்ந்திருந்தான்’
  ‘ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து எழுபது ஓட்டங்களை எடுத்திருந்தது’

 • 2

  (மனம் ஒருவரிடம் அல்லது ஒன்றிடம்) வசமிழத்தல்.

  ‘அவள் அழகில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டான்’
  ‘கண்ணதாசனின் பாடல்களில் என் மனத்தைப் பறிகொடுத்துவிட்டேன்’