தமிழ் பீறிடு யின் அர்த்தம்

பீறிடு

வினைச்சொல்பீறிட, பீறிட்டு

 • 1

  (நீர் முதலிய திரவம்) மிகுந்த வேகத்துடன் பாய்தல் அல்லது வெளிப்படுதல்.

  ‘அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் பீறிட்டது’
  ‘குழாயைத் திறந்ததும் தண்ணீர் பீறிட்டது’

 • 2

  (சிரிப்பு, அழுகை, துக்கம், குரோதம் போன்றவை) அடக்க முடியாதபடி வேகத்துடன் வெளிப்படுதல்.

  ‘அடிவயிற்றிலிருந்து அவளுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது’