தமிழ் பறிமுதல் யின் அர்த்தம்

பறிமுதல்

பெயர்ச்சொல்

 • 1

  (சட்டவிரோதமாக வைத்திருப்பதை அல்லது சட்டபூர்வமான நடவடிக்கையாக ஒன்றை) கைப்பற்றும் செயல்.

  ‘எங்களிடம் ஆயுதமே இல்லாதபோது ஆயுதப் பறிமுதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை’
  ‘ஆபாசப் புத்தகங்களைப் பறிமுதல் செய்யக் காவல்துறையினருக்கு உரிமை உண்டு’
  ‘விதிகளை மீறியதற்காக அந்தத் தொழிற்சாலையின் உரிமம் பறிமுதல்செய்யப்பட்டது’
  ‘சொத்துப் பறிமுதல்’