தமிழ் பறைசாற்று யின் அர்த்தம்

பறைசாற்று

வினைச்சொல்-சாற்ற, -சாற்றி

  • 1

    (ஒன்று அல்லது ஒருவர்) ஒரு தன்மையை, நிலையைப் பிறர் அறியும்படி வெளிப்படுத்துதல்.

    ‘உன் திறமையை நீயே பறைசாற்றிக்கொள்வதா?’
    ‘குடியரசு தின அணிவகுப்பு நாட்டின் ராணுவ பலத்தைப் பறைசாற்றுவதாக இருந்தது’
    ‘அவருடைய துடிப்பான ஆட்டமே அவருக்குத்தான் வெற்றி என்பதைப் பறைசாற்றியது’