தமிழ் பலகாரம் யின் அர்த்தம்

பலகாரம்

பெயர்ச்சொல்

 • 1

  இனிப்பு அல்லது கார வகைத் தின்பண்டம்.

  ‘பண்டிகைக்குப் பலகாரம் செய்ய வேண்டும்’
  ‘அவருடைய நாக்கு ருசியான பலகாரத்துக்கு ஏங்கியது’

 • 2

  (சோற்றைத் தவிர்த்து) இட்லி, தோசை போன்ற உணவு வகைகள்.

  ‘உங்கள் வீட்டில் காலையில் எப்போதும் பலகாரம்தானா?’
  ‘இரவு என்ன சாப்பிடுவீர்கள்? பலகாரமா சாப்பாடா?’