தமிழ் பலகை யின் அர்த்தம்

பலகை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) (மேசை, கதவு போன்ற மரச் சாமான்கள் செய்வதற்குப் பயன்படுத்தும்) குறைந்த பருமனில் நீளத்தில் அதிகமாகவும் அகலத்தில் குறைவாகவும் அறுக்கப்பட்ட மரத் துண்டு.

    ‘தேக்குப் பலகையில் செய்த அலமாரி’
    ‘அவருடைய கடைக்குக் கதவு என்பது பல பலகைகளின் வரிசைதான்’

  • 2

    வட்டார வழக்கு சிலேட்டு.