தமிழ் பலத்த யின் அர்த்தம்

பலத்த

பெயரடை

 • 1

  (அளவில்) அதிகமான.

  ‘பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’
  ‘அவர் பேசி முடித்ததும் அவையில் பலத்த கைதட்டல் எழுந்தது’
  ‘அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்’

 • 2

  (தன்மையில்) கடுமையான.

  ‘போலீசார் சுட்டதில் இருவருக்கு பலத்த காயம்’
  ‘சட்டத்திருத்தம் குறித்து உறுப்பினர்களுக்கு இடையே பலத்த சர்ச்சை நடந்தது’