தமிழ் பலன் யின் அர்த்தம்

பலன்

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக) செய்த செயலுக்கு ஏற்ற விளைவு; (குறிப்பாக) நன்மையான விளைவு; பயன்.

  ‘இவ்வளவு நாள் உழைத்ததற்குப் பலன் இல்லாமல் போகாது’
  ‘‘எல்லாம் என் பூர்வ ஜென்ம பலன்’ என்று அலுத்துக்கொண்டார்’
  ‘சிகிச்சை பலன் அளித்தது’
  ‘இந்த உரத்தால் நிலத்திற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது’

 • 2

  வட்டார வழக்கு (ஒருவரின் பெயரில் உள்ள) சொத்து.

  ‘கைப்பற்றிலுள்ள பலன்கள் வாரிசாகிய மகனையே சேரும் என்று உயிலில் உள்ளது’

 • 3

  கணிதம்
  கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்றவற்றின் விடையாக அமைவது.

  ‘9x6இன் பெருக்கல் பலன் 54’
  ‘39÷13இன் வகுத்தல் பலன் என்ன?’

 • 4

  சோதிடம்
  (கிரகப் பெயர்ச்சி, ஜாதக அமைப்பு போன்றவற்றால் ஒருவருக்கு ஏற்படும்) நன்மை அல்லது தீமை.

  ‘சனிப் பெயர்ச்சிப் பலன்களைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் எழுதியிருக்கின்றன’