தமிழ் பலப்பு யின் அர்த்தம்

பலப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு உறுதி; வலிமை.

  ‘மேசை நல்ல பலப்பாக இருக்கிறது’
  ‘வேலியைப் பலப்பாகக் கட்டு’
  ‘கதியால்களை நெருக்கமாகப் போட்டால்தான் வேலி பலப்பாக இருக்கும்’
  ‘பலப்பான மரத்தில்தான் கூரை போட வேண்டும்’
  ‘நல்ல பலப்பான பலகையில் செய்த வாங்கு’