தமிழ் பலம் யின் அர்த்தம்

பலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (செயல் செய்வதற்கான, இயக்கத்திற்கான உடலின்) ஆற்றல்; சக்தி; (மன) வலிமை.

  ‘எழுந்திருக்கக்கூட பலம் இல்லாமல் படுக்கையில் கிடந்தான்’
  ‘‘உடல் பலத்திற்கு உடற்பயிற்சி இருப்பது போலத்தான் மன பலத்திற்கு தியானமும்’ என்றார்’

 • 2

  ஒருவரின் திறமை, செயல்பாடு போன்றவற்றுக்குச் சக்தி தருவதாக இருக்கும் ஒருவர் அல்லது ஒன்று.

  ‘பணம் தந்த பலம்தான் அவரை இப்படி எடுத்தெறிந்து பேச வைக்கிறது’
  ‘என் மனைவிதான் எனக்கு பலம்’

 • 3

  (-ஆக, -ஆன) (அமைப்பில், தன்மையில்) உறுதி; திடம்.

  ‘ஐந்து மாடி கட்டுவதற்கு பலமான அஸ்திவாரம் வேண்டும்’
  ‘இதைவிட பலமான கயிறு இல்லையா?’
  ‘பாதுகாப்பு பலமாக இருக்கிறது’
  உரு வழக்கு ‘எங்கள் நட்பின் பலம் பலருக்குத் தெரியாது’

 • 4

  பேச்சு வழக்கு (அளவில், கடுமையில்) அதிகம் அல்லது மிகுதி.

  ‘என்ன, சாப்பாடு பலமா?’
  ‘நெற்றியில் பலமான காயம்’
  ‘பலமான யோசனை’
  ‘காற்று பலமாக வீசியது’
  ‘கல்யாணத்தில் கவனிப்பு பலமாக இருக்கிறது’

 • 5

  (பணம், அதிகாரம் முதலியவை) மிகுதியாக உள்ள நிலை; செல்வாக்கு.

  ‘அவருக்கு ஆள் பலம் அதிகம்’
  ‘அரசியல் பலத்தினால் எதையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறாரா?’
  ‘பண பலத்தினால் வந்த திமிர்’

உச்சரிப்பு

பலம்

/(b-)/

தமிழ் பலம் யின் அர்த்தம்

பலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தற்போது வழக்கில் இல்லாத) நாற்பது கிராம் கொண்ட நிறுத்தலளவை.