தமிழ் பல்லக்கு யின் அர்த்தம்

பல்லக்கு

பெயர்ச்சொல்

  • 1

    தூக்கிச்செல்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட, பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய, (முன்பு அரச குடும்பத்தினர் போன்றோர்) பயணம் செய்வதற்கு உரிய சாதனம்.

    ‘பல்லக்குகள் இப்போது பெரும்பாலும் சுவாமி ஊர்வலத்துக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன’

  • 2

    வட்டார வழக்கு (மேற்குறிப்பிட்டதைப் போன்று அலங்கரிக்கப்பட்ட) பாடை.