தமிழ் பல்லைக்கடித்துக்கொள் யின் அர்த்தம்

பல்லைக்கடித்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (உணர்ச்சியோ தான் செய்வதோ தன்னை மீறிச் சென்றுவிடாமல்) கட்டுப்படுத்திக்கொள்ளுதல்; பொறுத்துக்கொள்ளுதல்.

    ‘கோபத்தில் எதிர்த்துப் பேசிவிடாமல் இருக்க வேண்டுமே என்று பல்லைக்கடித்துக்கொண்டான்’
    ‘இந்த வேலையில் இன்னும் இரண்டு மாதம் பல்லைக்கடித்துக்கொண்டு இரு. பிறகு வேறு வேலைக்கு முயற்சிசெய்யலாம்’