தமிழ் பலவீனம் யின் அர்த்தம்

பலவீனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும்போது) உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை; தளர்ச்சி.

  ‘காய்ச்சலுக்குப் பின் சற்று பலவீனமாகத்தான் இருக்கும்’
  ‘இருதயம் பலவீனமாக இருக்கும் இந்தச் சமயத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது ஆபத்து’
  ‘அடிக்கடி தோண்டினால் கட்டடத்தின் அஸ்திவாரம் பலவீனம் அடையும்’
  ‘உள்நாட்டுப் போர்களினால் அந்த நாட்டின் பொருளாதாரமும் கட்டமைப்பும் மிகவும் பலவீனப்பட்டுப்போயிருக்கின்றன’

 • 2

  (ஒருவருடைய குணத்திலோ செயல்பாட்டிலோ காணப்படும்) குறை; குறைபாடு.

  ‘உட்கட்சிப் பூசல்கள்தான் அக்கட்சியின் பெரும் பலவீனம்’
  ‘நல்ல மனிதர்தான் என்றாலும் அவருக்கும் சில பலவீனங்கள் உண்டு’
  ‘ஆசிரியருடைய நடைதான் நாவலின் பலவீனம்’