பலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பலி1பலி2

பீலி1

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு வீட்டின் மேல் விழும் மழை நீர் வடிந்தோடுவதற்காகக் கூரையின் விளிம்பில் உலோகத்தால் வளைவாக அமைக்கப்படும் நீளமான அமைப்பு.

பலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பலி1பலி2

பலி2

வினைச்சொல்பலிக்க, பலித்து

 • 1

  (இவ்வாறு நடக்கும் என்று சொல்வது அல்லது இவ்வாறு நடக்க வேண்டும் என்று விரும்புவது அல்லது ஒருவர் காணும் கனவு) உண்மையாகவே நடத்தல் அல்லது நிகழ்தல்.

  ‘ஒரு மாதத்திற்குள் வேலை கிடைக்கும் என்று ஜோதிடர் சொன்னது பலித்துவிட்டதே!’
  ‘உங்கள் ஆசீர்வாதம் நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’
  ‘தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு பலித்தது’

 • 2

  (நிறைவேற்ற நினைப்பது) வெற்றிபெறுதல்.

  ‘போன காரியம் பலித்ததா?’
  ‘உன் தந்திரமெல்லாம் அவனிடம் பலிக்காது’

பலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பலி1பலி2

பலி

பெயர்ச்சொல்

 • 1

  (வேண்டுதலுக்காகத் தெய்வத்திற்கு ஆடு, கோழி போன்றவற்றை) காவு கொடுத்தல்.

  ‘ஆட்டை பலியிட்டுப் பூஜையை முடித்தனர்’
  ‘திருவிழா ஆரம்பிப்பதற்கு முன் சாமிக்குக் கோழி ஒன்றை பலிதந்தனர்’
  உரு வழக்கு ‘பணத்துக்காக அவர் லட்சியத்தை பலி கொடுத்துவிட்டார்’

 • 2

  (விபத்து, கலவரம் முதலியவற்றால்) உயிர் இழப்பு.

  ‘தீ விபத்தில் நால்வர் பலி’
  ‘போன வருடம் பாகிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கம் லட்சக் கணக்கில் உயிர்களை பலி வாங்கியது’
  ‘அவருடைய மகன் போன வருடம் ஒரு சாலை விபத்தில் பலியானான்’
  ‘இரண்டு உலகப் போர்களும் பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது’

 • 3

  (யாகம் முதலியவற்றில் முன்னோருக்கு இடும்) உணவுப் பொருள்.

உச்சரிப்பு

பலி

/(b-)/