தமிழ் பலிகடா யின் அர்த்தம்

பலிகடா

பெயர்ச்சொல்

  • 1

    பழி, தண்டனை போன்றவற்றிலிருந்து ஒருவர் தப்பித்துக்கொள்வதற்காக அநியாயமான முறையில் தண்டிக்கப்படும் மற்றொரு நபர்.

    ‘மேலதிகாரிகள் செய்த மோசடிக்கு இவனை பலிகடா ஆக்கிவிட்டார்கள்’
    ‘உங்கள் இருவருக்கிடையில் இருக்கும் பிரச்சினையில் என்னை பலிகடா ஆக்கப் பார்க்காதீர்கள்’