பலே -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பலே1பலே2

பலே1

பெயரடை

 • 1

  (கேலியாகப் பாராட்டும்போது) சாமர்த்தியமான.

  ‘பலே திருடன்’
  ‘அவன் பலே ஆள்! தனக்கு வேண்டியதை முடித்துக்கொண்டான்’

பலே -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பலே1பலே2

பலே2

இடைச்சொல்

 • 1

  ஒருவரின் திறமையைப் பாராட்டுவதற்குப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘பலே! பலே! நன்றாகப் பாடுகிறாய்’
  ‘இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பலே!’