தமிழ் பள்ளம் யின் அர்த்தம்

பள்ளம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிலிருக்கும் பிற பகுதிகளை விடத் தாழ்ந்த பகுதி; நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரிய குழி.

  ‘பள்ளத்தில் வீடு இருப்பதால் மழை பெய்தவுடன் நீர் தேங்கிவிடுகிறது’
  ‘எரிகல் விழுந்து ஏற்பட்ட பெரும் பள்ளம் இதுதான்’
  ‘சாலை மேடும்பள்ளமுமாக இருந்தது’
  ‘தென்னை மரம் வைப்பதற்காகப் பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கிறார்’