தமிழ் பளு யின் அர்த்தம்

பளு

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (பொருளின்) கனம்.

  ‘இவ்வளவு பளுவாக இருக்கும் கல்லை இந்த வண்டியில் ஏற்ற முடியாது’
  ‘தலையில் சுமக்க முடியாத அளவிற்கு மூட்டை பளுவாக இருக்கிறது’

 • 2

  (வேலை, வரி முதலியவற்றின்) சுமை.

  ‘அலுவலகத்தில் வேலைப் பளு அதிகம்’
  ‘வரிப் பளுவைக் குறைக்க வேண்டும்’

 • 3

  வேதியியல்
  (தனிமங்களைக் குறித்து வரும்போது) அதிகமான அணு எண் கொண்டது.

  ‘பளுவான தனிமத்தின் அணுக்கருவைப் பிளக்கும் நிகழ்வுக்கு அணுக்கரு பிளவு என்று பெயர்’