தமிழ் பழக்கப்படு யின் அர்த்தம்

பழக்கப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (மீண்டும் மீண்டும் ஒன்றைச் செய்வதாலோ ஒருவருடன் அல்லது ஒன்றுடன் உறவு ஏற்படுவதாலோ) குணம், செயல், நடத்தை போன்றவை இயல்பானவைபோல் படிந்துவிடுதல்.

  ‘அடிக்கடி பயணம் செய்து பழக்கப்பட்டவர்களை ஒரே இடத்தில் கட்டிப்போட முடியாது’
  ‘தலையணை இல்லாமல் தூங்குவது எனக்குப் பழக்கப்பட்டுவிட்டது’
  ‘மின்விசிறிக்குப் பழக்கப்பட்டுவிட்டால் அது இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது’

 • 2

  அனுபவத்தால் தெரிந்திருத்தல்.

  ‘இது எல்லோருக்கும் பழக்கப்பட்ட வழி’
  ‘பழக்கப்படாத இடத்தில் இரவில் தூங்க முடிவதில்லை’
  ‘பழக்கப்பட்ட மனிதர்களை விட்டுச் செல்ல எனக்கு மனம் வரவில்லை’