தமிழ் பழக்கம் யின் அர்த்தம்

பழக்கம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  பல முறை செய்திருப்பதால் அல்லது பழகியிருப்பதால் ஒருவருடைய இயல்பில் படிந்துவிடுகிற தன்மை.

  ‘வெற்றிலை போடும் பழக்கம்’
  ‘எதற்கெடுத்தாலும் சாக்குப்போக்குச் சொல்லும் பழக்கம்’
  ‘காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது எனக்குப் பழக்கமாகப் போய்விட்டது’

 • 2

  (ஒருவர்) முன்னரே அறிந்துவைத்திருக்கும் நிலை; பரிச்சயம்; தொடர்பு.

  ‘பழக்கம் இல்லாத பாதை’
  ‘பழக்கமான முகம்’
  ‘எனக்கு அவரோடு அவ்வளவு பழக்கம் இல்லை’
  ‘பேச்சுப் பழக்கத்தினால் வளர்ந்த நட்பு’

 • 3

  வழக்கம்.

  ‘திருமணத்துக்கு முன் நலங்கு வைப்பது எங்கள் பக்கத்துப் பழக்கம்’