தமிழ் பழகு யின் அர்த்தம்

பழகு

வினைச்சொல்பழக, பழகி

 • 1

  நட்புகொள்ளுதல்; உறவுகொள்ளுதல்.

  ‘மறைந்த கவிஞரோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன்’
  ‘அவர் இயல்பாகவே எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவார்’
  ‘அவனுடன் நன்றாகப் பழகிய பின்னரே அவனது உண்மையான குணம் எனக்குத் தெரிந்தது’

 • 2

  (ஒரு இடம், செயல் போன்றவற்றுக்கு) பழக்கப்படுதல்; பலமுறை அனுபவப்பட்டு அறிதல்.

  ‘பழகிய இடம் என்பதால் சகஜமாக உள்ளே சென்றான்’
  ‘பழகப்பழக எல்லாமே அலுத்துப்போய்விடுகிறது’

 • 3

  பயிலுதல்.

  ‘வீட்டிலேயே தையல் பழகிவருகிறேன்’