தமிழ் பழமை யின் அர்த்தம்

பழமை

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (காலத்தால்) முந்திய நிலை; பண்டைய காலத்தைச் சார்ந்தது; தொன்மை.

    ‘பழமையான சிற்பங்கள்’

  • 2

    சிந்தனை, வாழ்க்கை முறை போன்றவற்றில் ஏற்கனவே பின்பற்றப்படுவதையே பின்பற்றும் நிலை.

    ‘அவர் எதிலும் பழமையை விரும்பும் மனப்போக்கு உடையவர்’