பழம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பழம்1பழம்2

பழம்1

பெயர்ச்சொல்

 • 1

  காய் பழுத்து (மனிதர்களாலும் விலங்குகளாலும் பெரும்பாலும்) உண்ணக் கூடியதாக இருக்கும் நிலை.

  ‘ஊருக்குப் போய்விட்டு வரும்போது பழங்கள் வாங்கிக்கொண்டு வருவார்’
  ‘தக்காளிப் பழம்’

 • 2

  வாழைப்பழம்.

  ‘வெற்றிலையும் பழமும் வைத்துத் தட்சிணை கொடுத்தார்’
  ‘அர்ச்சனைத் தட்டில் பழத்தை வை’

 • 3

  காரியம் பலித்தது என்பதைக் குறிக்கும் சொல்.

  ‘‘போன காரியம் காயா, பழமா?’ ‘பழம்தான்’’

 • 4

  (சிறுவர் சண்டைக்குப் பின்) நட்பு நிலையைக் குறிப்பிடும் சொல்.

  ‘என்னோடு காயா பழமா?’

 • 5

  (தாயம் போன்ற விளையாட்டில்) வெற்றி நிலை அடைந்ததைக் குறிக்கும் சொல்.

  ‘ஒரு தாயமும் ஒரு ஆறும் விழுந்தால் நான் பழம்’

பழம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பழம்1பழம்2

பழம்2

பெயரடை

 • 1

  (காலத்தால்) முந்திய; கடந்த கால; பழைய.

  ‘சோழர் காலத்துப் பழங்காசுகள் கிடைத்தன’
  ‘பழங்காலத்துக் கதைகள்’