பழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பழி1பழி2

பழி1

வினைச்சொல்பழிக்க, பழித்து

 • 1

  ஒருவரை அல்லது ஒரு செயலைத் தாழ்த்தியும் இழிவுபடுத்தியும் கேலியாகவும் பேசுதல்; தூற்றுதல்; நிந்தித்தல்.

  ‘அந்த மகானைப் பழித்துப் பேச உனக்கு எப்படி நா வந்தது?’
  ‘தன்மீது ஊழல் குற்றம்சாட்டப்பட்டது வெளியே தெரிந்தால் ஊரார் தன்னைப் பழிப்பார்கள் என்ற அச்சம் அவருக்கு இருந்தது’

பழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பழி1பழி2

பழி2

பெயர்ச்சொல்

 • 1

  தகாத அல்லது முறையற்ற செயலைச் செய்தார் என்று மற்றவர் கேவலமாக நினைக்கும் வகையில் ஒருவர்மீது கூறப்படுவது/அப்படிக் கூறப்படும் நிலை.

  ‘உன்னைப் பட்டினி போட்டேன் என்ற பழி எனக்கு வேண்டாம்’
  ‘கொலைப் பழி’
  ‘திருட்டுப் பழி’