தமிழ் பழு யின் அர்த்தம்

பழு

வினைச்சொல்பழுக்க, பழுத்து

 • 1

  (தாவரங்களில்)

  1. 1.1 காயானது முற்றிய, கனிவான நிலையை அடைதல்

   ‘வாழைப் பழங்களைப் புகைபோட்டுப் பழுக்க வைப்பது உண்டு’
   ‘மாம்பழம் நன்றாகப் பழுத்துவிட்டது’

  2. 1.2 (இலை) உதிர்வதற்கு முன்பு நிறம் மாறுதல்

   ‘ஆலமரத்தின் அடியில் பழுத்த இலைகள் உதிர்ந்து கிடந்தன’

 • 2

  (பிறவற்றில்)

  1. 2.1 (பரு, கட்டி போன்றவை) நன்கு பருத்து உடையும் நிலைக்கு வருதல்

   ‘கட்டி பழுத்து விண்விண்ணென்று வலிக்கிறது’

  2. 2.2 (அடித்தல், கிள்ளுதல் முதலியவற்றால் உடலில் குறிப்பிட்ட பகுதி) சிவந்து வீங்குதல்

   ‘ஒரு அறை விட்டால் கன்னம் பழுத்துவிடும்’
   ‘இப்படிப் பழுக்கும் அளவுக்கா குழந்தையின் கையைக் கிள்ளுவது?’

 • 3

  (மரபு வழக்கு)

  1. 3.1 (சலிப்பு அடைந்து கூறும் முறையில்) செலவழிதல்

   ‘தீபாவளிக்குத் துணி எடுத்ததில் ஆயிரம் ரூபாய் பழுத்துவிட்டது’

  2. 3.2இலங்கைத் தமிழ் வழக்கு குணமாதல்

   ‘ஊதுமாக்கூழ் குடித்தால் தடிமன் பழுத்துவிடும்’