தமிழ் பழுதடை யின் அர்த்தம்

பழுதடை

வினைச்சொல்-அடைய, -அடைந்து

  • 1

    சீர்கெடுதல்; கோளாறு அடைதல்; பழுதாதல்.

    ‘இயந்திரங்களைப் பழுதடையவிடாமல் தக்க முறையில் பராமரிக்க வேண்டும்’
    ‘பல வருடங்களாக மூடியே கிடந்ததால் வீடு பழுதடைந்துவிட்டது’
    ‘அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன’