தமிழ் பழுது யின் அர்த்தம்

பழுது

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்று சீர்கெட்ட அல்லது இயங்காத நிலை; கோளாறு.

  ‘பழுதான சாலைகளைச் சரிசெய்யும் பணி விரைவில் தொடங்கும்’
  ‘இயந்திரத்தில் பழுது எங்கிருக்கிறது என்று தெரிந்தால் அல்லவா செப்பனிட முடியும்?’

 • 2

  குற்றம்குறை.

  ‘செய்யும் முறை எப்படியிருந்தாலும் அவரது நோக்கத்தில் யாரும் பழுது சொல்ல முடியாது’