தமிழ் பாக்கி யின் அர்த்தம்

பாக்கி

பெயர்ச்சொல்

 • 1

  (பணம் குறித்து வரும்போது) செலவழிந்தது போக மிச்சமாக இருப்பது; மீதி.

  ‘‘கொடுத்த பத்து ரூபாயில் பாக்கி எங்கே?’ என்று கேட்டார்’

 • 2

  (இருக்க வேண்டிய அல்லது வர வேண்டிய ஆட்களை, பொருள்களைக் குறித்து வரும்போது) மீதி.

  ‘பாக்கி ஆட்கள் எல்லாம் நாளைதான் வருவார்கள்’
  ‘பாக்கி சாமான்கள் எங்கே?’

 • 3

  மேலும் செலுத்தப்பட வேண்டியிருப்பது.

  ‘அவனிடம் பணம் பாக்கி நிற்கிறது, வாங்கி வா’
  ‘மின் கட்டணப் பாக்கிக்காக மின் இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள்’

 • 4

  (ஒரு செயலில் செய்ததுபோக) எஞ்சியிருப்பது; மீதி; மிச்சம்.

  ‘பாக்கிக் கதையை நாளை சொல்லு!’
  ‘வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியவை எவ்வளவோ பாக்கி இருக்கின்றன’
  ‘எல்லா வேலையும் முடிந்தது; நீங்கள் வந்து கடையைத் திறந்துவைக்க வேண்டியதுதான் பாக்கி’

 • 5

  ஒருவரோ ஒன்றோ விடுபட்டுவிடாமல் இருக்கும் நிலை.

  ‘ஒருவர் பாக்கி விடாமல் எல்லோரிடமும் விஷயத்தைச் சொல்லிவிட்டான்’
  ‘ஒரு இடம் பாக்கியில்லாமல் எங்கும் தேடிவிட்டேன்; சாவி கிடைக்கவில்லை’