பாகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாகம்1பாகம்2

பாகம்1

பெயர்ச்சொல்

 • 1

  (இயந்திரம், உடல் முதலியவற்றில்) குறிப்பிட்ட செயலைச் செய்யும் பகுதி; உறுப்பு.

  ‘வெடித்துச் சிதறிய விமானத்தின் பாகங்களைத் தேடும் பணி நடைபெறுகிறது’
  ‘இயந்திரத்தின் ஒரு பாகம் பழுதாகியிருக்கிறது’
  ‘மனித உடலில் சில பாகங்கள் பழுதானால் அதை மாற்றும் அளவுக்கு மருத்துவம் முன்னேறியிருக்கிறது’
  ‘கரப்பான்பூச்சியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க வேண்டும்’
  ‘பூ என்பது தாவரத்தில் இனப்பெருக்கத்துக்கான பாகம் ஆகும்’

 • 2

  ஒன்றைக் குறிப்பிட்ட விகிதத்தில் பிரிப்பதால் கிடைக்கும் அளவு; பங்கு.

  ‘பூமியின் மேற்பரப்பில் நான்கில் மூன்று பாகம் நீரால் சூழப்பட்டிருக்கிறது’
  ‘மரச்சட்டத்தை மூன்று பாகமாக அறுத்தார்கள்’
  ‘இந்த வீட்டில் எனக்கும் ஒரு பாகம் உள்ளது’

 • 3

  (நாடு, உலகம் போன்றவற்றைக் குறித்து வரும்போது) பகுதி; பிரதேசம்.

  ‘பூமியின் சுழற்சியால் உலகின் பல பாகங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன’
  ‘தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சியால் நாட்டின் பல பாகங்களுக்கும் செய்திகள் அனுப்புவது எளிதாகியுள்ளது’

 • 4

  (வெவ்வேறு சமயத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்படும் ஒரு திரைப்படத்தின் அல்லது நாடகத்தின்) வெவ்வேறு பகுதிகளுள் ஒன்று; (நூலின்) உட்பிரிவாக அமையும் ஒரு பகுதி.

  ‘இந்த நாவல் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது’
  ‘டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ என்ற நாவல் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது’

 • 5

  அருகிவரும் வழக்கு (நாடகம், கூத்து போன்றவற்றில்) பாத்திரம்; வேடம்.

  ‘நாடகத்தில் கிருஷ்ணன் பாகத்தை ஏற்று நடித்துப் புகழ் பெற்றவர்’

பாகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாகம்1பாகம்2

பாகம்2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு நான்கு முழ அளவு.