தமிழ் பாங்கு யின் அர்த்தம்

பாங்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (செயலைச் செய்யும்) முறை; விதம்.

  ‘அவர் விருந்தினர்களை உபசரிக்கும் பாங்கே தனி’
  ‘சங்ககாலப் பாடல்களில் இயற்கைக் காட்சிகளைச் சித்தரிக்கும் பாங்கு சிறப்பானது’

 • 2

  பக்குவம்; நயம்.

  ‘பாங்காகப் பேசிக் காரியத்தை முடித்துவிடு’
  ‘ராக ஆலாபனை பாங்காக இருந்தது’

 • 3

  (முன் குறிப்பிடப்படும்) தன்மை நிறைந்தது.

  ‘மணல் பாங்கான பூமி’
  ‘குடும்பப் பாங்கான கதை’
  ‘கட்டுரை இன்னும் கொஞ்சம் விமர்சனப் பாங்குடன் இருந்திருக்கலாம்’

தமிழ் பாங்கு யின் அர்த்தம்

பாங்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இஸ்லாமிய வழக்கு