தமிழ் பாசம் யின் அர்த்தம்

பாசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  இரத்த சம்பந்தமுடைய உறவினருக்கிடையே ஏற்படும் இயற்கையான பிணைப்பு; அன்பு.

  ‘தங்கையை மிகுந்த பாசத்தோடு வளர்த்தான்’
  ‘தாய்ப் பாசம் அவளை அவ்வாறு பேசவைத்தது’
  ‘என்னுடன் அவன் பாசமாகப் பழகினான்’
  ‘ஒரு பாசமான வார்த்தையை அவனிடமிருந்து நான் கேட்டதில்லை’

 • 2

  (உலக) பற்று.

 • 3

  (சைவ சித்தாந்தத்தில்) ஆன்மா இறைவனுடன் கலப்பதற்குத் தடையாக இருந்து அதைக் கட்டுப்படுத்துவது.