தமிழ் பாசாங்கு யின் அர்த்தம்

பாசாங்கு

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு செயலைச் செய்வதாகத் தோற்றம் தரும் நடிப்பு.

  ‘ஆள் வரும் சத்தம் கேட்டதும் தூங்குவது போல் பாசாங்கு பண்ணினான்’
  ‘படிப்பதுபோல் பாசாங்கா செய்கிறாய்?’

 • 2

  மனத்தில் ஒன்றை நினைத்துக்கொண்டு வெளியே வேறொன்று பேசும் விதம்.

  ‘உதவி செய்வதுபோல் பேசுவார். ஆனால் எல்லாம் பாசாங்கு’