பாடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாடு1பாடு2

பாடு1

வினைச்சொல்பாட, பாடி

 • 1

  (பாடலை) இசையோடு குரல்மூலம் வெளிப்படுத்துதல்.

  ‘அந்தப் பாட்டை இன்னொரு முறை பாடு’
  ‘குழந்தையைத் தாலாட்டுப் பாடித் தூங்கவைத்தாள்’
  ‘(உரு. வ.) தலைவரின் புகழ் பாடும் தொண்டர்கள்’

 • 2

  (கவிதை, செய்யுள் போன்றவை) படைத்தல்; எழுதுதல்.

  ‘மன்னனின் வெற்றியைப் பாடிய புலவர்கள் பலர்’
  ‘கவி பாடும் திறமை அனைவருக்கும் கிட்டுவதில்லை’

பாடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாடு1பாடு2

பாடு2

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட காரியத்திற்காக ஒருவர் மேற்கொள்ள வேண்டிய) பொறுப்பு.

  ‘உனக்கு ஒரு கடையை வைத்துக்கொடுத்துவிட்டேன். ஒழுங்காக நடத்துவது உன் பாடு’
  ‘பிரச்சினையைப் பேசித் தீர்த்துக்கொள்வது அவர்கள் பாடு’

 • 2

  (குறிப்பிட்ட சூழலில் ஒருவரின்) நிலைமை.

  ‘கணவன் மனைவி சண்டையைத் தீர்க்கப் போய் என் பாடு திண்டாட்டமாகிவிட்டது’
  ‘வேலை கிடைத்துவிட்டதா? உன் பாடு கொண்டாட்டம்தான்’
  ‘மழை வந்துவிட்டால் நடைபாதையில் வசிப்போர் பாடு கஷ்டம்!’

 • 3

  (அனுபவிக்கும்) சிரமம்; கஷ்டம்.

  ‘தண்ணீர் பிடிப்பதற்குள் நாங்கள் படும் பாடு!’

 • 4

  (சிரமமான) வாழ்க்கை.

  ‘எனக்கு யாரும் உதவ வேண்டாம். என் பாட்டை நான் பார்த்துக்கொள்கிறேன்’
  ‘என் பாட்டை நான் யாரிடம் போய்ச் சொல்ல முடியும்?’
  ‘என்னோடு ஒப்பிட்டால் உன் பாடு எவ்வளவோ தேவலை’

 • 5

  (பெயரெச்சத்தின் பின் எதிர்மறைச் சொல்லோடு வரும்போது) எதிர்பார்த்த ஒன்று நிகழாததையோ விரும்பத் தகாத நிலை தொடர்ந்து நீடிப்பதையோ தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘மழை விட்ட பாடில்லை’
  ‘இவ்வளவு நேரமாகியும் வேலை ஆரம்பித்த பாட்டைக் காணோம்’
  ‘என் கஷ்டம் தீர்கிற பாடாக இல்லை’