தமிழ் பாடுபடு யின் அர்த்தம்

பாடுபடு

வினைச்சொல்பாடுபட, பாடுபட்டு

 • 1

  (உடலை வருத்தி) உழைத்தல்; (ஒன்றுக்காக) கஷ்டப்படுதல்.

  ‘நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்கள்’
  ‘பாடுபட்டுப் படித்தும் தேர்வில் வெற்றி பெறவில்லை’
  ‘பாடுபட்டுத் தேடிய பணத்தை நீங்கள் இவ்வாறு வீணாக்கலாமா?’

 • 2

  (மனம்) துன்பமடைதல்; துடித்தல்.

  ‘வீட்டுக்கு வர மாட்டேன் என்று நீ சொன்னதும் என் மனம் என்ன பாடுபட்டது தெரியுமா?’