தமிழ் பாட்டு யின் அர்த்தம்

பாட்டு

பெயர்ச்சொல்

 • 1

  ராகத்தில் அல்லது மெட்டில் அமைந்திருப்பது.

  ‘எனக்குப் பாட்டு வராது’
  ‘அவள் வானொலியில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள்’

 • 2

  பாடல்.

  ‘எந்த இடத்துக்குப் போனாலும் சினிமாப் பாட்டுதான் கேட்கிறது’
  ‘இன்னொரு முறை அந்தப் பாட்டைப் போடு’

 • 3

  (படிப்பதற்காக எழுதப்பட்ட) கவிதை; செய்யுள்.

  ‘தத்துவக் கருத்துகள் நிறைந்த பட்டினத்தார் பாட்டு’

 • 4

  பேச்சு வழக்கு (தொடர்ந்து வரும்) வசை; திட்டு.

  ‘நேரம் கழித்துச் சென்றால் மனைவியிடம் பாட்டு வாங்க வேண்டியிருக்கும்’