பாதம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பாதம்1பாதம்2

பாதம்1

பெயர்ச்சொல்

  • 1

    (கணுக்காலுக்குக் கீழ் உள்ள) காலின் கீழ்ப்பகுதி.

    ‘பாதத்தில் சலங்கை கட்டியிருந்தாள்’

  • 2

    உள்ளங்கால்.

  • 3

    (மணை போன்ற சாதனங்களை நிறுத்திவைக்கப் பயன்படும்) கால் போன்ற பகுதி.

    ‘வெண்கலக் கும்பாவின் பாதம் உடைந்துவிட்டது’

  • 4

    சமூக வழக்கு
    தென்கலை வைணவர்கள் அணியும் நாமத்தின் கீழ்ப் பகுதியில் இருக்கும் கோடு.

பாதம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பாதம்1பாதம்2

பாதம்2

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    குறிப்பிட்ட நட்சத்திரத்தின் காலத்தில் நான்கில் ஒரு பகுதி.

    ‘மூலம் கடைசிப் பாதம் என்றால் அவ்வளவு தீய பலன்கள் இருக்காது’