தமிழ் பாதியாகு யின் அர்த்தம்

பாதியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (நோயால்) உடம்பு இளைத்து மிகவும் மெலிதல்.

    ‘நான்கு நாள் காய்ச்சலில் அவர் உடம்பு பாதியாகிவிட்டது’
    ‘உனக்கு என்ன ஆயிற்று? ஒரே மாதத்தில் ஆள் இப்படிப் பாதியாகிவிட்டாயே!’