தமிழ் பாதுகா யின் அர்த்தம்

பாதுகா

வினைச்சொல்பாதுகாக்க, பாதுகாத்து

 • 1

  (தீங்கு, அழிவு, சேதம் முதலியவை நேராமல்) காப்பாற்றுதல்; காத்தல்.

  ‘எந்தச் சூழ்நிலையிலும் நாட்டைப் பாதுகாக்க ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும்’
  ‘பிரதமரைப் பாதுகாக்க ஒரு தனிப் படையே உள்ளது’
  ‘இவை தாத்தா பாதுகாத்த பொருள்கள்’

 • 2

  (குடும்பம் முதலியவற்றை அல்லது கலைகளை) பேணுதல்; பராமரித்தல்.

  ‘அப்பாவுக்குப் பிறகு மாமாதான் எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்துவருகிறார்’
  ‘நாட்டுப்புறக் கலைகள் தலைமுறைதலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன’