தமிழ் பாதுகாவலர் யின் அர்த்தம்

பாதுகாவலர்

பெயர்ச்சொல்

 • 1

  பதினெட்டு வயது நிரம்பாத ஒருவரின் உரிமைகளை அவர் சார்பாகக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்/பெற்றோருக்குப் பதிலாக மாணவர் போன்றோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்பவர்.

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரை) பாதுகாக்கும் பணி செய்பவர்.

  ‘தாக்குதல் நடத்தியவர்களின் மீது அமைச்சரின் பாதுகாவலர் திருப்பிச் சுட்டார்’
  உரு வழக்கு ‘சமூகநீதியின் பாதுகாவலர்’

 • 3

  கிறித்தவ வழக்கு
  குறிப்பிட்ட செயல்பாட்டுக்குப் பொறுப்பாகத் திருச்சபையால் அறிவிக்கப்பட்ட புனிதர்.

  ‘புனித செசிலி அம்மாள் இசையின் பாதுகாவலராக இருக்கிறார்’
  ‘புனித தோமையார் இந்திய நாட்டின் பாதுகாவலர்’