தமிழ் பாய் யின் அர்த்தம்

பாய்

வினைச்சொல்பாய, பாய்ந்து

 • 1

  (தரையிலிருந்து எழும்பிக் குறிப்பிட்ட திசையில்) வேகத்துடன் செல்லுதல்; தரையிலிருந்து கிளம்பி ஓர் இலக்கு நோக்கி விரைந்து விழுதல்.

  ‘புலி பதுங்கிப் பாய்ந்தது’
  ‘கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை’

 • 2

  (நீர் போன்ற திரவம் அல்லது மின்சாரம், ஒளி போன்றவை) ஒன்றின் ஊடாக வேகத்துடன் செல்லுதல்.

  ‘ஆற்றில் நீர் சலசலத்துப் பாய்ந்தது’
  ‘அணையில் வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் பாய்கிறது’
  ‘ஜன்னலைத் திறந்தவுடன் அறையினுள் சூரிய ஒளி பாய்ந்தது’
  ‘சில வினாடிகள் தலை கீழாக நின்றால் தலைப் பகுதிக்கு ரத்தம் குப்பென்று பாய்வதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்’

 • 3

  (கத்தி, ஈட்டி போன்றவை அல்லது துப்பாக்கிக் குண்டு போன்றவை) வேகத்துடன் சென்று ஒரு பரப்பில் படுதல் அல்லது பட்டு உட்செல்லுதல்.

  ‘கூட்டத்தைக் கலைக்கக் காவலர் சுட்டதில் குண்டு பாய்ந்து இருவர் இறந்தனர்’

 • 4

  ஊடுருவுதல்.

  ‘ஈரம் பாயாத களிமண்’

 • 5

  (பிரச்சினைக்குக் காரணமாக இருப்பவர்மீது) ஆக்ரோஷமாகக் கோபத்தை வெளிப்படுத்துதல்.

  ‘பொறுமை இழந்த பயணிகள் பேருந்து நடத்துநர்மீது பாய்ந்தனர்’

தமிழ் பாய் யின் அர்த்தம்

பாய்

பெயர்ச்சொல்

 • 1

  (படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுவதற்கும் பயன்படும்)கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள்.

  ‘பாயைச் சுருட்டி வை’
  ‘கருப்பட்டிச் சிப்பம் கட்ட ஓலைப் பாய் வேண்டும்’

 • 2

  காற்றின் விசையால் செலுத்தப்படும் கப்பல்களில் அல்லது படகுகளில் கட்டப்பட்டிருக்கும் உறுதியான துணி.

தமிழ் பாய் யின் அர்த்தம்

பாய்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பெரும்பாலும்) வயதில் மூத்த, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆண்களைக் குறிக்க அல்லது அழைக்கப் பயன்படுத்தும் சொல்.

உச்சரிப்பு

பாய்

/(b-)/