தமிழ் பாய்ச்சல் யின் அர்த்தம்

பாய்ச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    (தரையிலிருந்து எழும்பிக் குறிப்பிட்ட திசையில்) வேகத்துடன் செல்லும் செயல்.

    ‘மாடு ஒரே பாய்ச்சலில் வேலியைத் தாண்டியது’
    ‘புலி நான்கு கால் பாய்ச்சலில் மானை விரட்டிச் சென்றது’
    ‘காவல்காரர் ஒரே பாய்ச்சலில் திருடன்மேல் விழுந்து பிடித்தார்’